திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பஸ் நிறுத்தத்தில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பயனற்று காணப்படும் நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.