கோவை மாநகராட்சி 56-வது வார்டுக்கு உட்பட்ட நேதாஜி புரம் கருப்ப கவுண்டர் வீதியில் உப்பு தண்ணீர் குழாய் உடைந்து உள்ளது. அதில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் கலக்கிறது. அதில் கழிவுநீருடன் தண்ணீர் கலந்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு சீராக உப்பு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. எனவே அங்கு உடைந்து கிடக்கும் குழாயை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.