பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் முளைத்துள்ளதால் ஏரி தூர்ந்து போன நிலையில் காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும் போது இந்த ஏரியில் மழைநீரை முழுமையாக சேகரித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து செட்டிக்குளம் பெரிய ஏரியை தூர்வாரி மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.