உடைந்தநிலையில் குடிநீர் குழாய்

Update: 2025-10-19 11:47 GMT

செங்கல்பட்டு மாவட்டம், காயரம்பேடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட திருவள்ளுவர் சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைந்தநிலையில் பரிதாபமாக உள்ளது. பல்வேறு குடும்பங்களுக்கு நன்னீர் ஆதாரமாக இருந்த இந்த குடிநீர்குழாயில் தற்போது பொதுமக்களால் குடம் வைத்து தண்ணீர் பிடிக்க முடியவில்லை. உடைந்த குழாயில் இருந்து தண்ணீர் வீணாகி சாலையில் குளமாக தேங்கியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி துறை அதிகாரிகள் குடிநீர் குழாயின் உயரத்தை அதிகரித்து பொதுமக்களின் தேவையை உடனடியாக பூர்த்தி செய்யவேண்டும்.


மேலும் செய்திகள்