தெருநாய்கள் தொல்லை

Update: 2025-10-19 11:45 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர், வெங்கடேஷ்வரா நகர், பிள்ளையார் கோவில் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த தெருவில் தெருநாய்களின் தொல்லை அளவுக்கு அதிகமாக உள்ளது. சாலையில் வாகனங்களில் செல்வோரை விரட்டி விரட்டி கடிக்கும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள், பள்ளி-கல்லூரி சென்று வீடு திரும்பும் மாணவ,மாணவிகள் அச்சத்தோடு வீடு திரும்புகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெருநாய் தொல்லையை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்