குடிநீர் தட்டுப்பாடு

Update: 2025-10-19 10:36 GMT

புதுக்கோட்டை நகருக்கு திருச்சி ஜீயபுரத்தில் இருந்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இதற்கான தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி திருவப்பூரிலும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மச்சுவாடியிலும் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் செல்லும் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதும், அதனை அதிகாரிகள் சரிசெய்வதும் வாடிக்கையாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்