விருதநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒருங்கிணைந்த கோர்ட்டு அருகே மக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது அந்த குடிநீர் தொட்டி சேதம் அடைந்து குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கோர்ட்டுக்கு வரும் பொதுமக்கள் குடிநீர் வசதி இன்றி மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?