திருக்கோவிலூர் அருகே வீரட்டகரம் கிராமத்தில் உள்ள குளம் நீண்ட நாட்களாக பராமரிப்பில்லாமல் தூர்ந்துபோய் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீரை அதிக அளவில் குளத்தில் சேமித்து வைக்க முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் விவசாய பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க குளத்தை விரைந்து தூர்வாரி சீரமைத்துத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.