வீணாகும் குடிநீர்

Update: 2025-09-28 15:33 GMT

பொம்மிடி ஊராட்சி நான்கு ரோடு முதல் வடசந்தையூர் தார்சாலையில் ஒகேனக்கல் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. மேலும் இந்த சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர் மீண்டும் குழாய்க்குள் சென்று விடுகிறது. இதனால் ஒகேனக்கல் குடிநீரில் கழிவுகள் கலக்கும் சூழ்நிலை உருவாகிறது. இது மட்டுமல்லாமல் தண்ணீர் சாலையில் தேங்கி நிற்கும்போது சாலை சேதம் அடைந்து வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இளஞ்செழியன், பாப்பிரெட்டிப்பட்டி.

மேலும் செய்திகள்