புதுக்கோட்டை மாவட்டம் வாகவாசல் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பில் சிலர் மின் மோட்டார் வைத்து பயன்படுத்துவதால், இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் வைத்து பயன்படுத்துபவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.