குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2025-09-14 14:15 GMT

மயிலாடுதுறை அருகே மணல்மேடு பேரூராட்சியில் காட்டுமன்னார்குடி செல்லும்; அகர மணல்மேடு- முட்டம்பாலம் கிராம நெடுஞ் சாலையில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்க்குழாய் செல்கிறது. இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையோரத்தில் குடிநீர் தேங்கி நிற்கிறது. சாலையிலும் பள்ளம் ஏற்பட்டு இரும்பு தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்து, சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும்



மேலும் செய்திகள்