தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் புதுப்பட்டினம் ஊராட்சியில் வெளி வயல் கிராமம் உள்ளது. இங்குள்ள ஆதிதிராவிடர் தெருவில் உள்ள குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகிவருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.