சேதமடைந்த குடிநீர் குழாய்கள்

Update: 2025-09-07 17:13 GMT
விக்கிரவாண்டி அடுத்த கண்டரக்கோட்டையில் கூட்டு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் இருந்து திண்டிவனத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த பெஞ்ஜல் புயல் காரணமாக இந்த குடிநீர் குழாய்கள் சேதமடைந்தது. ஆனால் தற்போது வரை இந்த குடிநீர் குழாய்களை சீரமைத்து திண்டிவனத்திற்கு குடிநீர் வினியோகம் செய்ய அதிகாாிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சேதமடைந்த குடிநீர் குழாய்களை விரைந்து சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்