பாபநாசம் பகுதி கீழகஞ்சிமேடு, மேலகஞ்சிமேடு, காளியமன்கோவில்தெரு, பாலாஜி நகர் ஆகிய பகுதிகளை இணைக்கும் இடத்தில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இந்த குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணி நடந்து வந்தது. இந்த பணி முழுமையாக நிறைவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் சாலை வழியாக பள்ளி மாணவ-மாணவிகள், முதியவர்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்