வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2025-09-07 13:20 GMT

கும்பகோணம் தாராசுரம் பகுதி ஶ்ரீராம் நகர் 2-ம் தெரு அருகே மாத்தி வாய்க்கால் உள்ளது. முறையாக தூர்வாரப்படாமல் வாய்க்கால் பராமரிப்பின்றி கிடக்கிறது. இதன் காரணமாக மழைக்காலத்தில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. மேலும், அருகில் உள்ள சத்திர குளம் மழைகாலத்தில் நிரம்பினாலோ? கரை உடைப்பு ஏற்பட்டாலோ? வீடுகளை வெள்ளம் சூழும் அபாயம் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து மாத்தி வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்