குடிநீர் தட்டுப்பாடு

Update: 2025-09-07 11:53 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதி பகைவரைவென்றான் கிராமத்தில் கடந்த சில வாரங்களாக காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் போதிய குடிநீர் இன்றி மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் சிலர் வெளியில் காசு கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வுகாண வேண்டும்.

மேலும் செய்திகள்