வீணாகும் குடிநீர்

Update: 2025-08-31 10:05 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பந்தப்பிளா பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு போதிய அளவில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை. இதன் காரணமாக அவர்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு காலி குடங்களுடன் அலைந்து திரியும் நிலை உள்ளது. அத்துடன் விலை கொடுத்து குடிநீரை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்