குடவாசல் நடுத்தெருவில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தின் கரையில் குழாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறுகிறது. வெளியேறும் தண்ணீர் குளத்துக்குள் தேங்கி கிடக்கிறது. நாளடைவில் தண்ணீர் சாக்கடையாக மாறிவிடுகிறது. இதனால் அந்த பகுதி ழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி கிடக்கும் தண்ணீரில் கொசுக்கள் அதிகளவில் உறத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.