பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி கிராமம் 2-வது வார்டு மேற்கு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில் நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி அருகில் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.