திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆலங்குடி மகாஜனம் மெயின் ரோட்டில் கோமாகுடி அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டு, சாலையில் குடிநீர் தேங்கி குட்டை போல காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் தேங்கிநிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.