ஓடை ஆக்கிரமிப்பு

Update: 2025-08-03 17:02 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா பள்ளிப்பட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஓடை உள்ளது. இந்த ஓடை முழுவதும் தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் செல்வதற்கு வழி இல்லாமல் விவசாய நிலங்களில் பாய்ந்து ஓடுகிறது. இதனால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்படுகிறது. எனவே பள்ளிப்பட்டி கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட ஓடையை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சேரலாதன், பாலவாடி.


மேலும் செய்திகள்