குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்கு மூடி தேவை

Update: 2025-08-03 11:50 GMT
வாசுதேவநல்லூர் அருகில் உள்ள தாருகாபுரத்திற்கு மேற்கே சாலையில் பள்ளமடை கரைக்கு மேற்கே இரண்டு இடங்களில் சாலை நடுவே தாமிரபரணி குடிநீர் கேட் வால்வு தொட்டியில் சிமெண்டு சிலாப் உடைந்ததால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு குடிநீர் கேட்வால்வ் மூடாமல் இருப்பதால் பலர் குழியில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் சிலர் தண்ணீரை அசுத்தப்படுத்துகின்றனர். எனவே குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்கு மூடி அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்