சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காரையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கம்புணரி சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர். குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும்.