பந்தலூர் அருகே கல்லட்டி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து விடுகிறது. அத்துடன் கழிவுநீர் கால்வாயும் இல்லை. இதனால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.