விருதுநகர் மாவட்டம் சித்தமநாயக்கன்பட்டி கிராமத்தில் முறையாக குடிநீர் வருவதில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.