காட்சிப்பொருளான குடிநீர் குழாய்

Update: 2025-07-20 15:13 GMT
பரங்கிப்பேட்டை அடுத்த வில்லியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாடார் தெருவில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக கடந்த ஆண்டு வீடுகள் தோறும் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. ஆனால் இது நாள் வரை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அந்த குழாய் பயனின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு போதிய அளவுக்கு குடிநீர் கிடைக்காததால் அவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்