செஞ்சி அருகே வல்லத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு சில ஆண்டுகள் ஆகியும், அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு போதுமான அளவுக்கு குடிநீர் கிடைக்காததால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே காட்சிப்பொருளாக உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.