பெரம்பலூர் அருகே உள்ள ஈச்சங்காடு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு போதுமான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் போதிய தண்ணீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதி மக்கள் தங்களின் அன்றாட தேவைக்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.