சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா திருவேகம்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட ஆந்தகுடி உரசூர் கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த கிணறு தற்போதுவரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி ஆழ்துளை கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.