பழுதடைந்த அடிப்பம்பு

Update: 2025-07-06 11:45 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே சமத்துவபுரத்தில் ரேஷன் கடை அருகே பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அடிப்பம்பு அமைக்கப்பட்டு உள்ளது. இதனை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த அடிப்பம்பு பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள அடிப்பாம்பை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்