திறந்து கிடக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் தொட்டி

Update: 2025-07-06 11:29 GMT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா மேலத்தானியத்திலிருந்து எம்.உசிலம்பட்டி வழியாக ஒலியமங்கலம் செல்லும் சாலையில் மேலத்தானியம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாலையோரம் காவிரி கூட்டுக்குடிநீர் தொட்டியின் மூடி திறந்த நிலையில் உள்ளது. இதனால் அருகே உள்ள பள்ளி மாணவ -மாணவிகளும் இதன் வழியாக சென்று வருகின்றனர். மேலும் இந்த வழியாக அதிக அளவில் இருசக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. எனவே மூடப்படாத தொட்டியில் விழுந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதியில் பல இடங்களில் சாலையோர தொட்டிகள் மூடப்படாமல் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரம் உள்ள தொட்டியினை மூட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்