வடிகால் தூர்வாரப்படுமா?

Update: 2025-05-25 13:25 GMT

தஞ்சை அருகே வாளமர்கோட்டை செண்பகவாரி வடிகால் முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. வடிகால் முழுவதும் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் வடிகால் விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி உள்ளது. வடிகாலில் செடி கொடிகள் வளர்ந்து இருப்பதால் நீர்வழிப் பாதையில் தடை ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செண்பகவாரி வடிகாலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்