பந்தலூர் அருகே பந்தப்பிளாவில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் போதிய குடிநீர் வசதி இல்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். சிலர், குடிநீர் தேடி நீர்நிலைகளுக்கு அலைந்து திரிகின்றனர். எனவே அந்த பகுதியில் போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.