பயனற்ற நீர்த்தேக்க தொட்டி

Update: 2025-05-18 09:40 GMT

புதுக்கோட்டை மாவட்டம், பல்லவராயன் பத்தை புதுப்பட்டி யாதவர் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இப்பகுதியில் நீர்த்தேக்க தொட்டி ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது பயன்பாடு இன்றி பயனற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் கோடை வெயிலில் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பயனற்றுள்ள நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்