ஈரோடு குமலன்குட்டை டவர்லைன் காலனியில் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2 மாதங்களாக சரிவர தண்ணீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் கூலிவேலைக்கு செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.