மெஞ்ஞானபுரம் அருகே இலங்கநாதபுரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதன் தூண்களின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் குடிநீர் தொட்டி சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான குடிநீர் தொட்டியை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.