தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் காரைக்கால் சாலை பகுதியில் முல்லை நகர் உள்ளது. இங்கு பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் வரும் குடிநீர் சுகாதாரமின்றி கலங்களாக வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், பெரும்பாலான குடிநீர் குழாய்களில் முறையான குடிநீர் வருவதில்லை. இதனால் அந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை பிரச்சினையும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு சுத்தமான மற்றும் முறையான குடிநீர் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
