காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

Update: 2025-04-20 18:50 GMT
சங்கராபுரம் அருகே புதுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் நலன் கருதி கடந்த பல மாதங்களுக்கு முன்பு மினி குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஆனால் அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த மினி குடிநீர் தொட்டி பயனின்றி காட்சி பொருளாக இருந்து வருகிறது. எனவே மினிகுடிநீர் தொட்டி சேதம் அடையும் முன் அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்