குளம் தூர்வாரப்படுமா?

Update: 2025-04-06 14:38 GMT

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தூர் சிட்கோ, ஜே.ஜே.நகர் 2-வது தெருவில் 2 குளம் உள்ளது. இந்த குளங்கள் மிகவும் பழமையான குளம். பல ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் இந்த குழத்தில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது ஆகாய தாமரை, செடி, கொடிகள் அடர்ந்து புதர்போல் காணப்படுகிறது. மேலும், சிலர் குளத்தில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதன் காரணமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்