காட்சி பொருளான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்

Update: 2025-03-30 17:36 GMT
மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் நலன் கருதி குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பொருத்தப்பட்டது. ஆனால் அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பயனின்றி காட்சி பொருளாக இருந்து வருகிறது. இதன் காரணமாக மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்