மேலநீலிதநல்லூர் யூனியன் சேர்ந்தமங்கலம் கஸ்பா பஞ்சாயத்து 1-வது வார்டு கிராம நிர்வாக அலுவலக தெரு அருகில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த ஓராண்டாக தண்ணீர் நிரப்பப்படாமல் பயன்பாடற்று காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே தொட்டியில் தண்ணீர் நிரப்பி பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.