குடிநீர் தட்டுப்பாடு

Update: 2025-03-30 12:10 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம், எம்.புதுப்பட்டி கிராமம் காளியம்மன் கோவில் பின்புறம் உள்ள தெருக்களில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். மேலும் சிலர் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடை காலத்தை கருத்தில் கொண்ட அப்பகுதியில் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்