வாசுதேவநல்லூர் அருகே வெள்ளானைக்கோட்டையில் இருந்து தாருகாபுரம் வழியாக சங்கரன்கோவில் செல்லும் சாலையில் 2 இடங்களில் தாமிரபரணி குடிநீர் குழாய் வால்வு தொட்டிகளின் கான்கிரீட் மூடி சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் அப்பகுதியில் தாமிரபரணி குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.