குடிநீர் வசதி வேண்டும்

Update: 2025-03-16 10:39 GMT

தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதி புதுக்குடி மாதாகோவில் (கிழக்கு) 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்களுக்கு குடிநீர் வழங்க குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் தொட்டி பழுதடைந்த காரணத்தினால் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக அந்த பகுதி மக்கள் குடிநீர் வசதி இன்றி தவித்து வருகின்றனர். குடிநீருக்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உருவாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதி மக்களுக்கு முறையான குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்