திருச்சி மாவட்டம், தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் காமலாபுரம் ஊராட்சி காமலாபுரம் மாரியம்மன் கோவில் அருகே 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியின் அருகே கோவில், அங்கன்வாடி மையம், நூலகம், பஸ் நிலையம் உள்ளிட்டவை உள்ளன. இந்த நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.