விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 11-வது ஆராய்ச்சிப்பட்டி திரவுபதி அம்மன் கோவில் தெருவில் கடந்த சில நாட்களாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். மேலும் வெளியில் பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதி மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.