சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா சூசையப்பர்பட்டணம் கிராமத்தில் 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தற்போது வெயில் காலம் தொடங்க உள்ள நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நாள்தோறும் சீரான முறையில் குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.