விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் உள்ள மினி குடிநீா் தொட்டிகள் பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக வெகு தொலைவு செல்ல வேண்டிய அவல நிலை தொடர்கிறது. எனவே பராமரிப்பின்றி காட்சிப்பொருளாக உள்ள மினி குடிநீா் தொட்டிகளை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.