சிதம்பரம் அருகே மேல்அனுவம்பட்டு ஊராட்சி மண்டபம் கிராமத்தில் செல்வ விநாயகர் கோவில் குளம் அமைந்துள்ளது. இந்த குளம் தூர்ந்துபோய் குட்டைபோல் காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் அங்கு அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் பொதுமக்களுக்கு குடிநிர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை தவிர்க்க குளத்தை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?