சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி கல்லல் கிராமத்தில் இந்திரா நகர் , ஆசிரியர் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 6 மாதங்களாக குடிநீர் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் தடையின்றி குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.